ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு..!
ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன .
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன. 4 போட்டிகள் பாகிஸ்தானில் , மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது.