17 வயது சிறுமியின் நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டல் விடுத்த ராணுவ சிப்பாய் கைது
17 வயது சிறுமியின் நிர்வாண காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி கட்டுஸ்தோட்டை பிரதேசத்தில் வாழும் சிறுமியை அச்சுறுத்திய 19 வயதுடைய இராணுவ சிப்பாய் தொடர்பில் கட்டுஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைதாகியுள்ளார்.
செய்திகளின்படி, சம்பவம் பின்வருமாறு;
கடந்த 11 ஆம் திகதி பாடசாலை மாணவி ஒருவர் தனதுபெற்றோருடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் வந்து தனது நிர்வாண காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி ஒரு நபர் தன்னை அச்சுறுத்துவதாக முறைப்பாடு செய்துள்ளார்.
டிக் டோக் மீடியா நெட்வொர்க் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் உறவை ஏற்படுத்திய பின்னர், அந்த நபரின் வேண்டுகோளின் பேரில் அவர் நிர்வாணமாக வீடியோவில் தோன்றியுள்ளமை சிறுமியின் வாக்குமூலம் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த நபர் சிறுமி நிர்வாணமாக தோன்றயதை பதிவு செய்து அந்த மாணவிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அத்தோடு தான் விரும்பும் நேரமெல்லாம் நிர்வாணமாக தோன்றுமாறு மிரட்டல்விடுத்துள்ளார். அப்படி செய்யாது போனால் ஏற்கனவே உள்ள வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
விசாரணையில் சந்தேக நபர் மின்னேரிய இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது. பின்னர், பொலிஸாரால் முகாமிற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், 14.06.2023 அன்று முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் முறைப்பாட்டாளரின் கையடக்கத் தொலைபேசி என்பன விசாரணைக்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் சந்தேகநபர் 15000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு ஜூலை 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.