பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.8 ரிக்டர் அளவில் பதிவு.

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.