உலக தற்கொலை தினத்தில் அக்கரைப்பற்று வைத்தியசாலை உளநல பிரிவின் விழிப்புணர்வு
உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (10-09-2020) நடைபெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்……உளநலப்பிரிவு பதில் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.ஜெ.நௌபல், டொக்டர் திருமதி சுமதி றெமன்ஸ் .டொக்டர் நபில் இல்லியாஸ் (RHO).ஆகியோர் உரையாற்றியதுடன்
குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தற்கொலை என்பது உள்நோக்கோடு ஒருவர் தம்மை தாமே மாய்த்துகொள்வது என்பதாகும் என்றும். கடந்த 45 வருடகால இடைவெளியில் தற்கொலை மூலமான இறப்பு வீதம் 60 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு காரணமாக போர் கொலை, புற்றுநோய் போன்றவற்றை விட 10ஆவது முக்கிய காரணியாக தற்கொலை விளங்குவதாக விளக்கமளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை மூலம் தமது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
இதேநேரம் நமது நாட்டை பொறுத்தவரை தற்கொலையினால் ஒவ்வொரு 40 நொடிக்கு ஒருவர் இறப்பதுடன் வருடத்திற்கு 4000 பேர்வரையிலானோர் உயிர் இழப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் 15 தொடக்கம் 29 வரைக்குட்பட்ட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுவதாகவும் கூறப்பட்டது.
இதற்கு உயிரியல் உளவியல் மற்றும் சமூக ரீதியான காரணிகளே செல்வாக்கு செலுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதன் அடிப்படையில் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் முதலிடத்திலும் மதுபழக்க அடிமை, போதைவஸ்து பாவனை, பெற்றோர் கண்காணிப்பு போதாமை உள்ளிட்ட காரணிகளும் முறையே அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
Sathasivam Nirojan