களுத்துறையில் மேலுமொருவர் வெட்டிப் படுகொலை!

களுத்துறையில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலாதொட்ட – கொடபராகாஹேன பகுதியில் நேற்றிரவு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் திருமணமாகாத 43 வயதுடைய சுஜித் தர்மசேன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நடந்து சென்ற வேளையிலேயே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.