இரணைமடுக் குளத்தின் கீழான கால போக பயிற் செய்கைக் கூட்டம்.
இரணைமடுக் குளத்தின் கீழான கால போக பயிற் செய்கைக் கூட்டம்.
10/9/2020 காலை 10 மணிக்கு அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார் திணைக்கள தலைவர்கள் பொலீஸ் திணைக்களம் விவசாயப்பிரதிநிதிகள் கூடி 2020 /2021 ம் வருட காலபோக நெற் செய்கை விடயங்கள் கலந்துரையாடி பயிற்செய்கைக் கலண்டர் தயாரிக்கப்பட்டது இதற்கமைவாக பயிர்செய்கை மேற்கொள்வது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இரணைமடுக் குளத்தின் கீழான கனகராயன் ஆற்றுப் படுக்கையில் அரச காணிகளில் வகைதொகையற்ற மணல் அகழ்வைத்தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. எதிர்வரும் மாரிகாலத்தில் முன்கூட்டியே வான்கதவு திறக்கும் நிலையும் நீரை குறைவாக தேக்கும் நிலையும் உருவாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது.எனவே மணல் அகழ்வைத் தடுக்க இராணுவத்தினரை ஈடுபடுத்துமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கருத்தை ஏற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் தொடர் முயற்சிகள் மேற்கொள்வதாக தெருவித்தார்.