ஆதரவு இல்லையெனில் பாராளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி.

அரசாங்கத்தை நடத்திச் செல்ல மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவை பெற்று தராவிட்டால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க மொட்டு தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மோசமான நிலையில் இருந்த நாடு சற்று உயர்ந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ,அவர்களது ஆதரவு தேவை என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு கடந்த முறை மொட்டு மாவட்ட தலைவர்கள் பலர் கலந்து கொள்ளாத போது தெரிவிக்கப்பட்டது.

எனினும், இரண்டாவது நாள் மாநாட்டிற்குப் பின்,அரசுக் கட்சித் தலைவர்களை அழைத்து ஜனாதிபதி பேசிய போது , அனைவரும் அரசுக்கு தங்களால் ஆன முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக உறுதியளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.