மாகாண சபைத் தேர்தலையாவது உடனடியாக நடத்திக் காட்டுங்கள்! – அரசுக்குச் சஜித் சவால்.

துணிவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலையாவது உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசுக்குச் சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்தச் சவாலை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் எவ்வாறானதொரு ஆணையை வழங்கினாலும் அதனை ஏற்பதற்கு நாம் தயார். எனவே, மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.
ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றில் எதையாவது ஒன்றை விரைவில் நடத்தவும்.” – என்றார்.