17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 35 வயது பெண் கைது.

பட்டரைவாக்கத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (35). இவர் தனது மகன் அடிக்கடி தாக்குவதாக கூறி கொரட்டூர் பகுதியில் உள்ள மகனின் நண்பர் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கி இருந்தார். அப்போது அங்கு வசித்து வந்த மகனின் நண்பரான 17 வயது சிறுவனுடன் நெருங்கி பழகினார்.
இந்த நிலையில் சத்ய பிரியா தனது வீட்டுக்கு செல்வதாக கூறினார். மேலும் சிறுவனையும் தன்னுடன் அனுப்பும் படி வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் விசாரித்தபோது வீட்டில் தங்கி இருந்தபோது சத்யபிரியா பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக சிறுவன் கூறினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்ய பிரியாவை கைது செய்தனர்.