மேலுமொருவர் சுட்டுப் படுகொலை! – கொழும்பில் பதற்றம்.
கொழும்பில் மேலுமொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொடை மற்றும் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையடுத்து கொட்டாவையிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாவை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.