தாங்கள் விளையாடவுள்ள போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் அணி கோரிக்கை நிராகரிப்பு.

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதன்படி தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் (அக்டோபர் 5-ந் தேதி) ஆமதாபாத்தில் மோதுகின்றன

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் அக்டோபர் 15-ந் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் தங்களுக்கான போட்டி நடைபெறும் 2 இடங்களை மட்டும் மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவிலும் (அக்டோபர் 20-ந் தேதி), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும் (அக்டோபர் 23-ந் தேதி) விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் அட்டவணையை விரும்பவில்லை என்பதால் ஆப்கானிஸ்தான் , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கான இடத்தை மாற்றும்படி வலியுறுத்தி இருக்கிறது .

இந்த நிலையில் போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி சென்னை மற்றும் பெங்களுருவில் நடைபெறுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.