பாரீஸில் குண்டு வெடிப்பு : இருவரைக் காணவில்லை : 7 பேர் ஆபத்தான நிலையில் : 30 பேருக்கு காயம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், அருகில் உள்ள கட்டடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பாரிஸின் லத்தீன் குவாட்டர் பகுதியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஏழு பேர் ஆபத்தான நிலையிலும் , மொத்தம் 30 பேர் காயமடைந்து உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் கட்டிடங்கள் தீப்பிடித்து, ஒரு தெரு முழுவதும் சிதறிக்கிடந்த இடிபாடுகள் மற்றும் பிரெஞ்சு தலைநகர் முழுவதும் கரும் புகையை கிளப்பிய வண்ணம் உள்ளது.
பல கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Grosse déflagration rue Saint-Jacques suite à une explosion place Alphonse Laveran (face au Val de Grâce)#paris #valdegrace #incendie #explosion pic.twitter.com/BSgO6axOqm
— Etienne (@eneveu) June 21, 2023
A blast ripped through a street in the busy Latin Quarter of central Paris, causing the facade of one building to collapse, blowing out windows and starting a huge blaze. At least seven people were critically injured in the explosion https://t.co/Max0L7Hofe pic.twitter.com/VIpm1wdyHx
— Reuters (@Reuters) June 21, 2023