தலைமன்னாரில் கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்பு!
கடற்படைச் சிப்பாய் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத் தலைமன்னார் தலைமையகப் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிப்பாய் நேற்றுக் காலை பணிக்கு வராததால், அதிகாரிகள் அவருடன் பேசுவதற்காக அவர் தூங்கிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றனர்.
இதன்போது அவர் எழுந்திருக்காததால், அவரைப் பரிசோதித்த போது, அவர் இறந்து கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அதிகாரிகள் அறிவிதித்தனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்று தலைமன்னார் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.