அம்பாறை மாவட்ட மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பினர்.
அம்பாறை மாவட்ட மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர்
கடந்த சில தினங்களாக கடல் தொழிலுக்குச் செல்லாமல் இருந்த மருதமுனை-கல்முனை கரைவலை மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தம் தொடர்பான காலநிலை எச்சிரிக்கை மற்றும் தீப்பற்றிய எண்ணெய்க் கப்பல் கசிவுகளால் ஏற்படும் அபாயம் ஆகிய அச்சம் காரணமாகவே மேற்படி மீனவர்கள் கடல் தொழிலைத் தவிர்ந்திருந்தனர்.
நேற்றுமுதல் வழமைக்குத் திரும்பிய போதிலும் இன்றைய தினமே மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை தலா ஒவ்வொரு கரைவலைத் தோணிகளுக்கும் மீன்கள் பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
நோய்த்தோலி என்னும் சிறிய வகை மீனினமே தொடராக பிடிபடுவதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மீன்கள் பிடிபட்டமையினால் கரைவலை மீனவர்கள் ஆர்வத்தோடு தோணிகளை செலுத்துவதனை அவதானிக்க முடிகின்றது
மீன்கள் பிடிபட ஆரம்பித்த போதிலும் கரைவலை மீனின் விலைகள் குறையவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.