சிறு வேடங்களில் நடித்து, அசுர வளர்ச்சி பெற்ற 6 நடிகர்கள்..
தன் திறமைக்கேற்ற சினிமா வாய்ப்பு கிடைக்காதா என்ற ஆவலில் களம் இறங்கிய சிறு நடிகர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு தன் முயற்சியால் பெரிய நடிகர்களாகவும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.
மேலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள சிறு நடிகர் தான் மேற்கொண்ட படங்களில் வெற்றியையும் கண்டு இருக்கிறார்கள். அவ்வாறு அசுர வளர்ச்சியில் முன்னேறிய 6 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.
விதார்த்: அறிமுகம் இல்லாத நடிகராய் இருந்த இவர் 2010ல் வெளிவந்த மைனா படத்தில் கதாநாயகனாக இடம்பெற்றார். அதன்பின் இவர் மேற்கொண்ட படங்கள் வீரம், விவேகம் போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் ஆகவும் நடித்துள்ளார். சமீபத்தில் 2022ல் கார்பன், ஆற்றல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இருப்பினும் இப்படங்களில் இவர் போதிய வரவேற்பு பெறவில்லை.
சமுத்திரகனி: பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பின் இயக்குனராக நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் மூலம் பிரபலமானவர். அதன்பின் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பல பிரபலங்களோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்புகுட்டி: வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் அப்புகுட்டி. இவர் நகைச்சுவை நடிகராகவும் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் மேற்கொண்ட படங்களின் மூலம் விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் வெந்து தணிந்த காடு படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.
மிர்ச்சி சிவா: ரேடியோ ஜாக்கியாக இருந்து அதன் பின் சினிமாவில் சென்னை 600028, சரோஜா, தமிழ் படம் போன்ற படங்களில் நகைச்சுவை உணர்வோடு களமிறங்கியவர் தான் மிர்ச்சி சிவா. சமீபத்தில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், காசேதான் கடவுளடா என்னும் நகைச்சுவை படங்களில் நடித்திருக்கிறார்.
யோகி பாபு: ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்ற இவர் தற்பொழுது தன் முயற்சியால் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் வாரிசு படத்தில் இவரின் நகைச்சுவை நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தன் அடுத்த கட்ட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் யோகி பாபு.
சூரி: வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இவரின் பரோட்டா நகைச்சுவை மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அதன்பின் இவர் மேற்கொண்ட சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. சமீபத்தில் இவர் கதாநாயகனாக இடம் பெற்ற விடுதலை படமும் மாபெரும் வெற்றியை கண்டது.