டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதா?
காணாமல் போன டைட்டன் மினி நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படை டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் கப்பலொன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Twitter செய்தியில் அறிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகே அடையாளம் கண்டுள்ள பாகங்கள் நீர்மூழ்கி கப்பலினது பாகங்களாக இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல்படை நம்புகிறது.
இருப்பினும், இது டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு பகுதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
குறித்த பாகங்கள் தொடர்பில் நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
A debris field was discovered within the search area by an ROV near the Titanic. Experts within the unified command are evaluating the information. 1/2
— USCGNortheast (@USCGNortheast) June 22, 2023