603 இரவுகளுக்கு இலவசமாகச் சொகுசு ஹோட்டலில் தங்கியதாக ஆடவர் மீது புகார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் கிட்டத்தட்ட ஈராண்டுக்கு இலவசமாய்த் தங்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை அந்நாட்டுக் காவல்துறை விசாரித்துவருகிறது.
2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி அன்குஷ் டட்டா Roseate House ஹோட்டலில் ஓர் அறையைப் பதிவு செய்தார்.
மறுநாள் வெளியாகியிருக்க வேண்டும்.
ஆனால் அவர் 603 இரவுகளுக்குத் தங்கியிருந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஹோட்டலிலிருந்து வெளியேறினார்.
அவர் செலுத்தவேண்டிய கட்டணம்? 70,000 டாலர்.அதை அவர் கட்டவில்லை.
அவர் ஹோட்டல் ஊழியர்களுக்கு லஞ்சம் அளித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
உண்மையில் டட்டா எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பொய்க் கணக்குகள் மூலம் மறைக்கப்பட்டதாக Indian Express நாளேடு தெரிவித்தது.
ஹோட்டல் நிர்வாகிகள் காவல்துறையிடம் ஊழியர்கள் சிலர் மீது புகார் அளித்துள்ளனர்.
ஆதாரம் : AFP