கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.

கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் அதிகரித்த புதிய வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (23-06-2023) கடைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து குறித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் மாவட்ட அரச அதிபர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் கடந்த 2020 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீட்டிற்கு அமைவாகவே வரி தீர்மானிக்கப்பட்டு ஒரு சில வர்த்தகர்கள் வரி செலுத்தி வருவதாகவும் பிரதேச சபையின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.


ஆனாலும் இந்த நடவடிக்கை தொடர்பில் உடனடியாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்றும் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதால் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, விண்ணப்பங்களை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதன் மூலமே இதற்கான தீர்வு எட்ட முடியும் எனவும் குறித்த கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரச அதிபர்(காணி) மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதேச சபையின் செயலாளர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.