மாவட்ட நீதிபதி மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் தனது நீதி நிர்வாக வலயத்தில் 650இற்கும் மேற்பட்ட பயன்தரு மரங்களை நடுகை செய்யும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இராணுவம் மற்றும் கடற்படையின் ஆளணி உதவியுடன் இந்த மர நடுகையினை அல்லைப்பிட்டியில் ஆரம்பித்து வைத்தார். எதிர்கால சந்ததி பயனடையும் உயர் நோக்கில் ஊர்காவற்றுறை நீதி நிர்வாக பிரதேசத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.