டைட்டன் நீர்மூழ்கிக்கு நடந்தது என்ன? டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்

டைட்டன் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் வெடித்த நிலையில் டைட்டானிக் ஜேம்ஸ் கேமரூன் இந்த விபத்து பற்றி பேட்டி அளித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணத்தை அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

1997ல் டைட்டானிக் படத்தை இயக்கி உலகம் முழுக்க ஹிட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன் இந்த விபத்து குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த படம் பற்றி ஆய்வு செய்வதற்காக 33 முறை அவர் டைவ் அடித்து இருக்கிறார். உள்ளே சென்று டைட்டானிக்கை பார்த்து உள்ளார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், டைட்டன் நீர்மூழ்கிக்கு நேர்ந்த விஷயம் எதுவும் வியப்பானது இல்லை. அது எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவில்லை. இந்த நீர்மூழ்கி கடல் அழுத்தம் காரணமாக வெடித்து இருக்கலாம். அதுதான் எனக்கு தெரிந்து ஒரே வழி.

உள்ளே கடலுக்கு அடியே திடீரென அழுத்தம் கூடி ஷாக் வேவ் போல வந்து இருக்கலாம். இதனால் நீர் மூழ்கியின் பேட்டரி, அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பிரஷர் கண்ட்ரோல்லர், சிக்னல் சாதனங்கள் முதலில் உடைந்து இருக்கலாம். இதனால் உள்ளே அழுத்த மாறுபாடு ஏற்பட்டு அவர்கள் பலியாகி இருக்கலாம்.

இந்த கப்பல் விபத்து குறித்து ஆய்வு செய்ததில் எனக்கு கிடைத்த தகவல்கள் இதுதான். உள்ளே இருக்கும் அழுத்தம்தான் இதற்கு காரணம். சிக்னல் சாதனங்கள் உடைந்த காரணத்தாலேயே இதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கப்பலை கண்டுபிடிக்க முடியாது என்று அதிகாரிகளுக்கும் தெரிந்து இருக்கும். ஆனாலும் அவர்கள் தேவையற்ற நம்பிக்கையை கொடுத்துவிட்டனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு என்னுடைய இரங்கல்கள் என்று அவர் கூறி உள்ளார்.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

இதை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி வெடித்த நிலையில் 110 மணி நேர சோதனைக்கு பின் கப்பல் வெடித்தது உறுதி செய்யப்பட்டது. நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கப்பல் வெடித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate. இவர்களின் டைட்டன் நீர் மூழ்கி கப்பல்தான் தற்போது வெடித்து உள்ளது.
இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்

டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.