ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! – தமிழ்க் கட்சிகளைக் கைகோர்க்குமாறு வஜிர அழைப்பு.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். எனவே, அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவதையே விரும்புகின்றனர்.
ராஜபக்சக்களில் எவரும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவங்களை எவரும் மறக்காமல் இருந்தால் நல்லது. ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்த அனைவரும் கட்சி வேடுபாடின்றி இணைய வேண்டும்.” – என்றார்.