மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து…!
மேற்குவங்க மாநிலம் பங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 12 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.
மேற்குவங்க மாநிலம் ஒண்டா ரயில் நிலையம் அருகே அதிகாலை 4 மணியளவில் காலியான இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டன. நின்றிருந்த சரக்கு ரயில் மீது பின்னால் வந்த மற்றொரு ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ரயிலின் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டு தலைகீழாக கவிழ்ந்தன.
சிக்னல் கோளாறு காரணமா இல்லை, ஓட்டுநரின் கவனக்குறைவா என்ற கோணத்தில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு மிட்னாபூர், பன்குரா, புருலியா, புர்த்வான் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலம் பாலோசர் அருகே 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.