இவ்வாரம் அவசரமாகக் கூடும் நாடாளுமன்றம்! – நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடவுள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் இவ்வாரம் சனி, ஞாயிறு அவசரமாகக் கூட்டப்படவுள்ள நிலையிலேயே, நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி ஆராய இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.