ஒடிசாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி!

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
கஞ்சம் மாவட்டத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பெர்ஹாம்பூர்-தப்டபானி சாலையில் உள்ள டிகாபஹன்டி பகுதி அருகே ஞாயிறன்று இரவு இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
திருமண விழாவிற்குச் சென்ற திரும்பிக்கொண்டிருந்த பேருந்து, மற்றொரு பயணிகள் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மற்றும் டிகாபஹன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பலத்த காயமடைந்த இருவர் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தலா ஒவ்வொருவருக்கும் ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழக்க சிறப்பு நிவாரண ஆணையம் உத்தரவிட்டுள்ளது.