ரணிலின் வீட்டிற்கு தீ வைத்ததை நேரலையில் ஒளிபரப்பிய பியத் நிகேஷல கைது

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
09.07.2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட போது சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பியது தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.