துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் மரணம்! – 3 இளைஞர்கள் கைது.

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வக்கரை வனப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்கள் குழுவுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற 24, 28 மற்றும் 32 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.