கிராம பிரதிநிதிகளுடன் மத்திய வங்கி ஆளுநர் கலந்துரையாடல்.
மத்திய வங்கியின் ஆளுநர் 4 மாவட்டங்களின் கிராம பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.
கிளிநொச்சி அறிவியல் நகர் மத்திய வங்கியில் மத்திய வங்கியின் ஆளுநர் WGD அஸ்மின் தலைமையில் 4 மாவட்டங்களின் கிராம பிரதிநிதிகளுடன் நுண்கடனினால் பாமரமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
மத்திய வங்கியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் கிராம பிரதிநிதிகளுடன் மத்திய வங்கியின் ஆளுநர் நுண்கடனினால் மக்களின் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.
கலந்துரையாடலுக்கு வருகை தந்த கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்ததோடு இது தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கை முன் வைத்துள்ளார்கள்
இவ் கலந்துரையாடலில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சிறி வர்த்தன, துணை ஆளுநர்களான நாணயக்கார மற்றும் கருணாரத்தின, மத்திய வங்கியின் திணைக்கள பணிப்பாளர்கள் மேலதிக பணிப்பாளர்கள் கிராமமட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.