சோனியா காந்திக்கு எதிராக பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத்.
புதுடெல்லி: மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு எதிரான பகிரங்கப் போரைத் தொடர்ந்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசாங்கத்தை ஆதரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சோனியாவின் மவுனத்தையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பிடும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள தனது அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு சோனியா காந்தி பதிலளிக்காததை அடுத்து கங்கனா ரனவுத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.
‘அன்புள்ள மாண்புமிகு சோனியாஜி, உங்கள் மகாராஷ்டிரா அரசால் நான் நடைத்தப்பட்டதை கண்டு; ஒரு பெண்ணாக, நீங்கள் மனச்சோர்வடையவில்லையா? டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எங்களுக்கு வழங்கிய அரசியலமைப்பின் மதிப்புகளை நிலைநிறுத்துமாறு உங்கள் அரசாங்கத்திடம் கேட்க மாட்டீர்களா? என கங்கனா ட்வீட் செய்துள்ளார்;
பால் தாக்கரே, சிவசேனாவை நிறுவிய சித்தாந்தம் அதிகாரத்திற்காக வர்த்தகம் செய்யப்படுவதாகவும், சிவசேனா சோனியா சேனாயாக மாறி வருவதாகவும் கங்கனா ரனவுத் கூறினார். கங்கனா ரனவுத் இடத்தில் இல்லாத நிலையில்; தனது வீட்டை இடித்த செயலால் மனவருந்தி கோமாளிகளை ஆட்சியாளர்கள் என்று வர்ணிக்கக்கூடாது என்றும் ட்வீட் செய்துள்ளார்.