பிக் பாஸ் சீசன் 7ல் புதிதாக இவரா – யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதலில் 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி மற்ற மொழிகளில் பல சீசன்களை கடந்த நிலையில் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியதும், வரவேற்பின் உச்சத்தை அடைந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது தான். இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
கடைசியாக பிக் பாஸ் 6 வது சீசனில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். பல போட்டிகள் கடந்து சின்னத்திரை நடிகர் அசிம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது அடுத்த சீசனை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் தொடங்குவதாக தகவல் வெளியானது. அதோடு போட்டியாளர்கள் குறித்து தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. ஆகையால் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவருக்கு சமீபத்தில் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.