சூப்பர் சிக்ஸ் சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை.

உலக கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தனஞ்செயா – ஹசரங்கா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தனஞ்செயா 93 ரன்னில் அவுட்டானார். நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. வெஸ்லி 52 ரன்னும், பாஸ் டீ லீட் 41 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். ஸ்காட் எட்வர்ட்ஸ் களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எட்வர்ட்ஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், நெதர்லாந்து அணி 40 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.