ஆஷஸ் தொடரில் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 130/2.
ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஹாரி புருக் 45 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஹாரி புரூக் அரை சதம் அடித்து வெளியேறினார். பேர்ஸ்டோவ் 16, பிராட் 12, ராபின்சன் 9, ஜோஷ் டங் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.
டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். லாபுசேன் 30 ரன்னில் வெளியேறினார். உஸ்மான் கவாஜா அரை சதமடித்தார். மழை குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.
கவாஜா 58 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா 221 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.