கொழும்பு, பத்தரமுல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இருப்பினும் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்த நிலநடுக்கம் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி போன்ற பகுதிகளில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.