உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை மீதான விவாதம் இன்று (1) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை திருத்தங்களுடன் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்..
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் உள்நாட்டுக் கடனை மறு சீரமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும்,
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய கொள்கையை அமைச்சருக்கு வழங்குவதற்கான பிரேரணையாக இது தொடர்பான பிரேரணை சபைத் தலைவரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று காலை முதல் இரவு 7.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.