மாமன்னன் வெற்றி… மாரி செல்வராஜ்-க்கு சிறப்பு பரிசளித்த உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர்.
இந்நிலையில் மாமன்னன் பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் இருந்தனர்.