பிரான்ஸில் வெடித்த கலவரங்கள்; சீன பேருந்தின் மீது தாக்குதல்!
பிரான்ஸில் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில், சீனாவின் சுற்றுலா பேருந்தொன்று தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சீன குடிமக்கள் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரான்ஸ் நாட்டுக்கு துணை தூதரகத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
தெற்கு நகரத்தில் சீன சுற்றுலாக் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளைஞனைப் பொலிசார் சுட்டுக் கொன்ற நிலையில், பிரான்ஸில் கலவரங்கள் வெடித்துள்ளன.
இதனையடுத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டகாரர்களை அகற்ற பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் நடத்தியுள்ளனர். அத்துடன் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாளத்தில் சுமார் 2400 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.