கொளுத்தும் வெயிலிலும் கூட ஸ்வெட்டர், குல்லாவுடன் வாழும் அதிசய மனிதர்..வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்!

இந்த உலகில் சில மனிதர்கள் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருப்பார்கள். அவர்களை நாம் பார்க்கும்போது, எப்படி இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்றுகூட நமக்கு தோன்றும். இந்த வகையான அபூர்வ மனிதர்கள் லட்சத்தில் ஒருத்தர் அல்லது கோடியில் ஒருத்தர் தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடந்த சில மாதங்களாக வெயில் 45 டிகிரியை தாண்டி கொளுத்தி வரும் நிலையில், ஒருவர் மட்டும் ஸ்வெட்டர், குல்லாவுடன் வாழ்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். ஆம், உண்மைதான். வெயிலை சமாளிக்க நாம் எல்லோரும் மின்விசிறிகள், ஏசி மற்றும் ஏர் கூலர்களை பயன்படுத்தி வருகையில், விதிவிலக்காக ஒருவர் மாறி வாழுகிறார். மகேந்திரகரில் வசிக்கும் சந்த்லால் என்பவர்தான் இப்படி வினோதமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார்.

இவர் இந்த 45 டிகிரி வெயிலிலும் மூன்று அடுக்கு கொண்ட ஸ்வெட்டரையும், தலைக்கு அடர்த்தியான குல்லாவையும் போட்டு கொள்கிறார். வெயில் காலத்தின் பகல் மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் ஸ்வெட்டரை தான் இவர் அணிந்து கொள்கிறார். மேலும், அவரது காதுகளை மூடிக்கொள்ள கதகதப்பான தொப்பி மற்றும் சால்வை அணிந்து கொள்கிறார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு இவ்வளவு வெயிலும் கொப்புளங்களோ வியர்வையோ வரவில்லை.

இது வினோதமாகத் தோன்றலாம் ஆனால் இது உண்மைதான். சந்தலால் வசிக்கும் டெரோலி அஹிர் கிராமத்தில் மருத்துவர்கள் கூட திகைத்து போயுள்ளார்கள். எப்படி இவ்வளவு வெப்பத்தையும் இவரால் தாங்கி கொள்ள முடிகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இது மட்டுமல்லாது, இவர் கோடை காலத்திலும் குளிர் போன்ற உணர்வை உணர்வதாகவும் கூறியுள்ளார். இந்த காரணங்களால் சந்த்லால் தற்போது விவாதப் பொருளாகி உள்ளார்.

பொதுவாக சந்த்லாலுக்கு குளிர் அதிகம் உள்ள குளிர்காலங்களில் வெப்பமாக இருக்கும் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். மேலு, குளிர் நடுங்கும் நாட்களில், சந்த்லால் பனிக்கட்டியின் மீது படுத்துக் கொண்டு காலை 5 மணிக்கு ஏரியின் குளிர்ந்த நீரில் குளிப்பார் என்று ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும், இதுவரை சந்த்லால் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டதில்லை என்றும், இவரது ஆச்சரியமான உடல் தகுதிக்காக இவரது மாவட்ட நிர்வாகம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது என்றும் உறவினர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

இந்த பதிவை படிக்கும் யாருக்காக இருந்தாலும், சந்த்லால் ஒரு அபூர்வமான மற்றும் வினோதமான மனிதராக தோன்றுவார். ஆனால், இவர் வாழும் ஊரில் உள்ள மக்கள் சந்த்லாலை “வானிலைத் துறை” மனிதர் என்று குறிப்பிடுகிறார்கள். சந்த்லாலைப் பற்றி கேள்விப்பட்டு, பல்வேறு மருத்துவர்கள் அவரை பரிசோதிக்க வெளியில் இருந்து வருகிறார்கள். ஆனால் இது வரையிலும் ஏன் சந்த்லாலுக்கு இந்த உடல் அமைப்பு உள்ளது என்று யாரும் கண்டறியவில்லை. சந்த்லால் பனிக்கட்டி மீதான படுக்கையில் படுத்திருந்ததற்காக 2017-ஆம் ஆண்டில் உலக சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.