மடு தோவாலய பிரதான மதகுரு உட்பட 3 மத குருக்கள் சென்ற வான் விபத்து

மன்னார் மதவாச்சி வீதியில் இசைமாலத்தீவு பகுதியில் நேற்று (02) வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அங்கு பயணித்த மன்னார் மடு தேவாலயத்திற்கு பொறுப்பான மதகுருவான விக்டர் சோசை உட்பட மன்னாரில் உள்ள இரண்டு பிரதான தேவாலயங்களின் மதகுருக்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தின் பின்னர் ஆபத்தான நிலையில் உள்ள தந்தை விக்டர் சோசை முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மடு தேவாலயத்திலிருந்து அதிவேகமாக வந்த வேன் பிரதான வீதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.