யாழ். இருபாலையில் வீடொன்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.