வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இந்நிலையில் மின்னல் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.