கொழும்பு – யாழ் விமான சேவை.
இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை சனிக்கிழமை (01) ஆரம்பமாகியதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இச்சேவையினூடாக கொழும்பிலிருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும் இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்கள் காலை வேளைகளில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 என்ற விமானமே இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்துக்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.
ஒரு வழிக்கட்டணமாக 22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக 41,500 ரூபாவும் அறவிடப்படும். இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியைக் கொண்டு செல்ல முடியும்.