மின்சார மெத்தை வெடித்து தூங்கிக் கொண்டிருந்த நபர் பரிதாப பலி…!
மேகாலயாவில் மின்சார மெத்தை வெடித்ததில், தூங்கிக் கொண்டிருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேகாலயா மாநிலம் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஸ்மிட் நகரில் மின்சார மெத்தை வெடித்ததில் பின்சுக்லாங் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த திங்கள் கிழமை அதிகாலை அவரது வீட்டில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், வீட்டை திறந்து பார்த்தபோது பின்சுக்லாங் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாராணையை தொடங்கினர். விசாரணையில் மின்சார மெத்தை வெடித்து அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தேவைக்கு அதிகமாக மின்சார மெத்தை சார்ஜ் செய்யப்பட்டதால் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பின்சுக்லாங் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.