வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே இல்லாத ஒரு உலகக்கோப்பை.

தொடர் முழுவதும் நன்றாக விளையாடாமல் தோல்வியுற்று உலகக்கோப்பைக்கு குவாலிஃபை ஆகாமல் வெளியேறிய முன்னாள் சாம்பியன் டீம் வெஸ்ட்இண்டிஸ் ஒருபுறம், தொடர் முழுவதும் டீசண்டாக ஆடி சில தோல்விகளைப் பெற்ற ஜிம்பாப்வே மறுபுறம்!

வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே இல்லாத ஒரு உலகக்கோப்பையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இந்த ஐசிசி உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சிறிய அணிகளையும் அரவணைத்துக் கொண்டு ஆடவைத்தால்தான் அவர்களும் கவனம் பெறுவார்கள், அவர்களது கிரிக்கெட்டும் வளரும். அதை விட்டுவிட்டு 10 அணிகள் மட்டுமே ஆட வேண்டும் அதில் 8 நேரடித் தகுதி, மீதம் 2 குவாலிஃபையர் ஆடி உள்ளே வா என்று கூறுவது எந்தவிதத்தில் ஏற்புடையது ?

உலகக்கோப்பை போன்ற தொடர்களில் 16 அணிகளை ஆடவைக்கலாம். இருபுறம் 8 அணிகளாகப் பிரித்து ஆடவைக்கலாம்.

இப்படி ஆடவைக்கும்போது நேரடியாக தேர்வுறும் 10 அணிகள் இல்லாமல் 6 சிறிய அணிகளுக்கும் ஆட வாய்ப்புக் கிட்டும். கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்றால் பெரிய தொடர்களில் அணிகளைக் கூட்ட வேண்டுமே ஒழிய குவாலிட்டி கிரிக்கெட் கொடுக்கிறோம் என்று கூறி அணிகளைக் குறைத்தால் அது சிறிய நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்து அழிவுபாதையைத் தான் தேடி ஓடும்.

எல்லா சிறிய அணிகளையும் அழித்தபிறகு இந்த 10 நாடுகள் மட்டுமே காலம் முழுவதும் கிரிக்கெட்டை விளையாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

Leave A Reply

Your email address will not be published.