புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்! – ஐ.தே.கவினருக்கும் பதவி.

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் 22 பேர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று அரச தகவல்கள் கூறுகின்றன.
அவர்களுள் 8 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
மேலும் பல அரச நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள் பலர் நியமிக்கப்படவுள்ளனர் என்றும், அந்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சபையில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.