புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.
புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 – 30 யூனிட் வரையிலான மாதாந்த நுகர்வு கொண்ட பிரிவினருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வகைக்கு (0 -30) வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
(31 – 60 ) நிலையான கட்டணம் ரூ 550 இல் இருந்து 300 ஆகவும் , யூனிட் கட்டணம் ரூபா 37 இல் இருந்து 25 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது .
61 – 90 யூனிட்டுகள் நுகர்வை கொண்ட பிரிவில் யூனிட் கட்டணம் ரூ.42ல் இருந்து ரூ.35 குறைக்கப்பட்டுள்ளது , மேலும் அந்த பிரிவினருக்கு ரூ.650 ஆக இருந்த மாதாந்த நிலையான கட்டணம் ரூ.400 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
91 – 120 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட பிரிவுக்கான நிலையான கட்டணம் ரூ.1500ல் இருந்து ரூ.1000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.