பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் வீட்டை இடித்து தள்ளிய அரசு..!
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசரால் அதிரடியாக இடித்து நொறுக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஏழை பழங்குடியின ஒப்பந்தத் தொழிலாளி மீது பாஜக நிர்வாகியான பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்ததாக பரவிய வீடியோ நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைதொடர்ந்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டியதாக பிரவேஷ் சுக்லாவின் வீட்டை, மாவட்ட நிர்வாகம் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியது. முன்னதாக அவர் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கக்கோரி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார்.