தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரிப்பு! – கட்டுப்படுத்தக் களமிறங்கியது எஸ்.ரி.எப்.

தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
இவர்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் குதித்துள்ளனர்.
அவர்களுக்குப் பயந்து தென் மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான பாதாளக் குழுவினர் கொழும்புக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.