48 மணித்தியாலங்களுக்குள் பொலிஸ்மா அதிபர் நியமனம் – சபையில் பிரதமர் உறுதி.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் ஒருவரைப் பெயரிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என்று சபையில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் சாசன சபையை எந்த நேரத்திலும் சபாநாயகரால் கூட்ட முடியும் எனவும், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.