மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்.

நாடு தழுவிய ரீரியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படாவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சமகால பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு மீதி மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்துடன் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதியை இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க வேண்டும். இல்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.