பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் 27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.