உலகில் சைவ பிரியர்கள் வரிசையில் இந்தியா முதலிடம்!
உலகில் உள்ள நாடுகளில் சைவ பிரியர்கள் வரிசையில் முதலிடம் பெற்ற நாடு இந்தியா என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
முதலிடம் பிடித்த இந்தியா
பொதுவாக விருந்துகளில் நீங்கள் சைவமா, அசைவமா என்று கேட்கும் பழக்கம் இந்தியாவில் மட்டும் தான் அதிகமாக உள்ளது. பந்திகளில் சைவத்திற்கு தனி வரிசை கூட இந்தியாவில் இருக்கிறது.
அந்த வகையில், உலகில் உள்ள சைவ பிரியர்கள் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இனி, இந்தியாவை எல்லாரும் சைவ நாடு என்று கூட சொல்லலாம்.
பல விஷயங்களில் புள்ளி விவரங்களை சேகரிக்கும் உலக அளவிலான அமைப்பு இந்த ஆய்வு குறித்த அறிக்கையினை வெளியிட்டது. அதில், உலக அளவில் ‘சைவ நாடு’ என்ற வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் உள்ள மக்கள் 20 முதல் 39 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடைசி நாடு ரஷ்யா
சைவ பிரியர்கள் வரிசையில் இந்தியாவை தொடர்ந்து, மெக்சிகோ நாட்டில் 19 சதவீதம் பேரும், தைவானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும் சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர்.
இதனையடுத்து, அவுஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேர் சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர் என தெரியவந்துள்ளது.
சைவ உணவுகள் குறைவாக சாப்பிடுபவர்களில் கடைசி இடத்தை ரஷ்யா பிடித்துள்ளது. அங்கு, 1 சதவீதம் பேர் மட்டும் சைவ பிரியர்களாக இருக்கின்றனர். மீதம் உள்ள 99 சதவீத பேரும் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் சீனாவில் 5 சதவீதம் பேர் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை. ஜப்பானில் 9 சதவீதம் மக்களும், இங்கிலாந்தில் 10 சதவீதம் மக்களும் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை.